இலங்கையர்களை மியன்மாருக்கு கடத்திய மூவர் கைது
தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலை வாய்ப்புகளின் பின்னணியில் சுற்றுலா விசாக்களால் கவரப்பட்ட இந்த இலங்கையர்கள் தாய்லாந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்துள்ளனர்.
இலங்கையர்களை மியன்மாருக்கு கடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை மற்றும் திருகோணமலை பகுதிகளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஆயுதக் குழுவின் பிடியில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மியாவெட்டி பகுதியில் 56 இலங்கைக் குடிமக்கள் பயங்கரவாதக் குழுவால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலை வாய்ப்புகளின் பின்னணியில் சுற்றுலா விசாக்களால் கவரப்பட்ட இந்த இலங்கையர்கள் தாய்லாந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்துள்ளனர். மியாவெட்டியில் உள்ள பயங்கரவாத முகாமில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் இணைய மோசடிகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட இணைய-அடிமைகளாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து, மியான்மருக்கு கடத்தப்பட்ட இலங்கைக் குடிமக்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதில் மியான்மர் அதிகாரிகளின் உதவியையும் ஒத்துழைப்பையும் தீவிரமாகக் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியாவெட்டியில் உள்ள பயங்கரவாத முகாமில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் இணைய மோசடிகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட இணைய-அடிமைகளாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.