Breaking News
யார்க் கத்தோலிக்க பள்ளி வாரியம் கல்வி மையத்தில் பெருமிதக் கொடியை பறக்கவிடுவதற்கு எதிராக வாக்களித்தது
குறைந்தது மூன்று சமீபத்திய நிருவாகக் கூட்டங்களுக்கு காவல்துறை அழைக்கப்பட்டிருக்கிறது.
யோர்க் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியம் ஜூன் மாதம் அதன் கத்தோலிக்க கல்வி மையத்தில் பெருமிதக் (பிரைட்) கொடியை பறக்க விடுவதற்கு எதிராக வாக்களித்துள்ளது.
திங்கள்கிழமை இரவு நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அறங்காவலர்கள் 6-4 என்ற வாக்குகளுடன் கொடியேற்றத் தீர்மானத்தை தோற்கடித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பல மாதங்களாக ஆதரவாளர்களும் விமர்சகர்களும் மோதிக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறைந்தது மூன்று சமீபத்திய நிருவாகக் கூட்டங்களுக்கு காவல்துறை அழைக்கப்பட்டிருக்கிறது.
வாக்களித்த உடனேயே அறங்காவலர்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் அறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். சில பார்வையாளர்கள் முடிவுகளை ஆரவாரம் செய்தனர்.