ஜனாதிபதி தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன ரணிலை ஆதரிக்கும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தமது அசைக்க முடியாத ஆதரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுனவும் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தமது அசைக்க முடியாத ஆதரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மன்றக்குழு தமது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.