உலகக் கோப்பை வீரர்களின் உடையில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்று பிசிசிஐ எழுத வேண்டும்: சேவாக்
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை டேக் செய்த சேவாக், வீரர்கள் பாரத் என்று எழுதப்பட்ட உடையை அணியுமாறு பரிந்துரைத்தார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் செவ்வாய்கிழமை பிசிசிஐ-யிடம், வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் தேசிய அணி வீரர்களின் உடையில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்று பொறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை டேக் செய்த சேவாக், வீரர்கள் பாரத் என்று எழுதப்பட்ட உடையை அணியுமாறு பரிந்துரைத்தார்.
"ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். நம் அசல் பெயரை ‘பாரத்’ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற நீண்ட காலமாகிவிட்டது.
"இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் தமது மார்பில் பாரத் இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ (செயலாளர்) ஜெய் ஷாவை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சேவாக் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.