Breaking News
சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி
தொழில்நுட்ப காரணங்களால் விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சூடான் தலைநகரின் இரட்டை நகரமான ஓம்துர்மானில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் சூடானிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் கொல்லப்பட்டதாக கார்ட்டூம் மாநில ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சயித்னா இராணுவ விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சூடான் இராணுவம் கூறியது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.
தொழில்நுட்ப காரணங்களால் விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் 10 பேர் காயமடைந்ததாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.