ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ரிட் மனு வாபஸ்
இந்த மனு செவ்வாய் அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி.குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மதுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத பிஎம்டபிள்யூ கார் தொடர்பான வழக்கில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் இந்த மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு செவ்வாய் அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி.குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் சட்ட ஆலோசகர்கள், தமது வாடிக்கையாளருக்கு ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதால், மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்தின் அனுமதியை கோரினர்.
மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு மதுவைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது.