'சமர்த்' மற்றும் 'அபினவ்': இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் சிறிலங்கா வருகை
யோகா, கடற்கரை தூய்மை மற்றும் நடைப்பயிற்சி போன்ற நடவடிக்கைகளும் இந்தப் பயணத்தின் போது நடைபெறும். இதற்கு மேலதிகமாக, காலி மற்றும் கொழும்புக்கு அப்பால் புறப்படும் இலங்கை கடலோர காவல்படை கப்பலுடன் பாதைப் பயிற்சி (PASSEX) நடத்தப்படும்.

மாலத்தீவின் மாலே நகரில் 16 ஆவது 'தோஸ்தி' முத்தரப்பு பயிற்சியை நிறைவு செய்த இந்திய கடலோர காவல்படை கப்பல்களான 'சமர்த்' மற்றும் 'அபினவ்' ஆகியவை சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.
'சமர்த்' என்ற ஆழ்கடல் ரோந்து கப்பல் மற்றும் அதிவேக ரோந்து கப்பல் 'அபினவ்' ஆகியவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) காலி துறைமுகத்தை வந்தடைந்து மார்ச் 02 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐ.சி.ஜி.எஸ் கட்டளை அதிகாரிகள், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி பிரதீப் குமார் மற்றும் கமாண்டன்ட் (ஜே.ஜி) பிரபாத் குமார் ஆகியோர் இலங்கைக் கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
இந்தத் தங்கலின் போது, கப்பல்கள் இலங்கைக் கடலோர காவல்படைக்கு விபிஎஸ்எஸ், தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாடு, கடல்சார் மாசுப் பதிலளிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கும். மேலும் வேறு சில தொழில்முறை தொடர்புகளை நடத்தும்.
மேலும், யோகா, கடற்கரை தூய்மை மற்றும் நடைப்பயிற்சி போன்ற நடவடிக்கைகளும் இந்தப் பயணத்தின் போது நடைபெறும். இதற்கு மேலதிகமாக, காலி மற்றும் கொழும்புக்கு அப்பால் புறப்படும் இலங்கை கடலோர காவல்படை கப்பலுடன் பாதைப் பயிற்சி (PASSEX) நடத்தப்படும்.
இந்திய கடலோர காவல்படை மற்றும் அதன் திறன் குறித்த விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை வளர்ப்பதற்காக, இந்த கப்பல்கள் பள்ளி குழந்தைகள் பார்வையிட திறந்து வைக்கப்படும். பாதுகாப்பு உயர் மட்டத்தினர் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த விருந்தினர்களுக்கு இந்த கப்பல்களில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.