Breaking News
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த மோதலில் 18 இராணுவ வீரர்கள், 24 தீவிரவாதிகள் பலி
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த சண்டையில் 18 துணை இராணுவ வீரர்கள் மற்றும் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரவோடு இரவாக தீவிரவாதிகள் சாலைத் தடைகளை அமைக்க முயன்றதாகவும், பாதுகாப்புப் படையினர் அவர்களை அகற்றியதால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று "அகற்றும் நடவடிக்கைகள்" என்று இராணுவம் விவரித்த ஒன்றில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.