முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இளைஞருக்கு லண்டனில் 16 ஆண்டு சிறை
தங்கள் பிரிவை கொண்டாட சோனா விருப்பம் தெரிவித்ததைக் கேட்டு கோபமடைந்ததாக ஸ்ரீராம் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். மேலும் திருமணம் செய்ய மறுத்தால் கொலை செய்து விடுவதாக ஸ்ரீராம் மிரட்டியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா என்ற இளைஞர் தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சோனா பிஜு என்ற பெண் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் மார்ச் 5, 2022 அன்று 'ஹைதராபாத் வாலா' உணவகத்தில் நடந்தது, அங்குக் கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சோனா, பகுதிநேர பணியாளராக வேலை செய்து வந்தார். ஸ்ரீராம் உணவகத்திற்குள் நுழைந்து அவளை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தினார்.
நீதிமன்ற விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் பென் ஹோல்ட் ஸ்ரீராமின் இணைய தேடல்களை வெளிப்படுத்தினார். அதில் மனிதர்களை கத்தியால் கொல்வது மற்றும் "இங்கிலாந்தில் ஒரு வெளிநாட்டவர் ஒருவரை கொலை செய்தால் என்ன நடக்கும்" என்ற கேள்விகள் அடங்கும்.
இந்த ஜோடி ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் சந்தித்து 2017முதல் காதலித்து வருகிறது. ஆனால், அடிக்கடி சண்டை போட்டதால், ஸ்ரீராமுடனான உறவை சோனா முறித்துக் கொண்டார். பிப்ரவரி 2022 இல், அவர்கள் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற இங்கிலாந்து வந்தனர்.
தங்கள் பிரிவை கொண்டாட சோனா விருப்பம் தெரிவித்ததைக் கேட்டு கோபமடைந்ததாக ஸ்ரீராம் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். மேலும் திருமணம் செய்ய மறுத்தால் கொலை செய்து விடுவதாக ஸ்ரீராம் மிரட்டியுள்ளார்.
ஆனால், அவரை திருமணம் செய்ய சோனா மறுத்துவிட்டார். பின்னர் சோனா வேலை பார்த்த உணவகத்திற்கு சென்ற ஸ்ரீராம், கத்தியை எடுத்து அவரை 9 முறை குத்தினார். அந்தப் பெண் தரையில் மயக்கமடைந்து கிடந்தபோது அவர் தொடர்ந்து அவளைக் குத்தினார். அவர் தலையிட முயன்ற ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களை அச்சுறுத்தினார்.
அந்தப் பெண்ணுக்கு ஆறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அவரது காயங்களில் கழுத்தில் 10 அங்குல கத்திக்குத்து, அத்துடன் அவரது மார்பு, முன்கை, வயிறு மற்றும் முதுகில் காயங்கள் ஆகியவை அடங்கும்.