Breaking News
மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்
சிறிலங்காவில் பல உயர்மட்ட மற்றும் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் தோன்றிய காமினி மாரப்பன, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

பிரபல சட்டத்தரணியும் மூத்த ஜனாதிபதி சட்டத்தரணியுமான காமினி மாரப்பன தனது 82 ஆவது வயதில் காலமானார்.
'நல்லாட்சி' அல்லது 'யஹபாலன' அரசாங்கத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பணியாற்றிய திலக் மாரப்பன பி.சி.யின் சகோதரர் காமினி மாரப்பன.
சிறிலங்காவில் பல உயர்மட்ட மற்றும் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் தோன்றிய காமினி மாரப்பன, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
புகழ்பெற்ற இந்த வழக்கறிஞரின் இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.