Breaking News
உலகின் அதிவேக ஓட்டக்காரர் காலமானார்

15 ஆண்டுகளாக அதிவேகமாக ஓடும் வல்லமை கொண்டவராக திகழ்ந்தவரும் குறிப்பாக உலகின் அதிவேக ஓடும் மனிதராக இனங்காணப்பட்டவருமான ஒலிம்பிக் சாம்பியன் ஜிம் ஹைன்ஸ் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 10 வினாடிகளுக்குள் முடித்த முதல் மனிதர் இவர் என்று கூறப்படுகிறது.
ஜிம் ஹைன்ஸ் அமெரிக்க சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.9 வினாடிகளில் சாதனை படைத்துள்ளார்.
1968 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 9.95 இல் முடித்த ஹெய்ன்ஸ் இறக்கும் போது அவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.