பிரதமர் ஹரிணி அமெரிக்க உப ஜனாதிபதி வான்ஸை சந்தித்து வரி விதிப்பு குறித்து கலந்துரையாடியிருக்க வேண்டும்: ரணில்
விக்கிரமசிங்கவின் படி, பிரதமர் அமரசூரிய இந்தியாவில் இருக்கும்போது துணை ஜனாதிபதி வான்சுடன் குறைந்தபட்சம் ஒரு மணித்தியால சந்திப்பை ஏற்பாடு செய்ய இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாடியிருக்க வேண்டும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அண்மையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்கவின் படி, பிரதமர் அமரசூரிய இந்தியாவில் இருக்கும்போது துணை ஜனாதிபதி வான்சுடன் குறைந்தபட்சம் ஒரு மணித்தியால சந்திப்பை ஏற்பாடு செய்ய இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாடியிருக்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை (29) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள சமீபத்திய வரிகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பாதகமான தாக்கத்தை குறைக்க அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவின் விசேட வர்த்தக பிரதிநிதியிடம் முன்மொழிவுகளை முன்வைத்த நாடுகள் இந்தியாவும் சிறிலங்காவும் மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.