Breaking News
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர், சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்பு
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், ஜூன் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மோடி பதவியேற்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், ஜூன் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மோடி பதவியேற்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மீறி எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பூடான், நேபாளம், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வாய்ப்புள்ளது.