Breaking News
பிரிக்ஸ் அமைப்பில் சேரச் சிறிலங்காவுக்கு உதவ சீனா தயார்
பிரிக்ஸ் கூட்டணியில் எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு உதவ தயாராக உள்ள நாடுகளில் சீனாவும் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

வாங்கும் திறன் சமநிலையை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.3% பங்களிக்கும் பொருளாதாரங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பான பிரிக்ஸ் கூட்டணியில் எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு உதவ தயாராக உள்ள நாடுகளில் சீனாவும் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறிலங்கா இந்த அமைப்பில் இணைவதற்கான தனது கோரிக்கையை பதிவு செய்தது. எவ்வாறாயினும், பிரிக்ஸ் தற்போது விரிவுபடுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்பதால் சிறிலங்காவின் விண்ணப்பம் பின்னர் பரிசீலிக்கப்படும்.