Breaking News
கெஹெலிய உள்ளிட்ட 7 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பு
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்ஷன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.