அமலாக்கத்துறை பறிமுதல் செய்த பணத்தை ஏழைகளிடம் திருப்பி தர மத்திய அரசு திட்டம்: பிரதமர் மோடி
இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், பிரதமர் மோடி, "நான் இதைப் பற்றி நிறைய சிந்திக்கிறேன். ஏனென்றால் இந்த மக்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்று என் இதயத்திலிருந்து உணர்கிறேன். அதை அவர்கள் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.

ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். இதற்காகச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், பிரதமர் மோடி, "நான் இதைப் பற்றி நிறைய சிந்திக்கிறேன். ஏனென்றால் இந்த மக்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்று என் இதயத்திலிருந்து உணர்கிறேன். அதை அவர்கள் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.
"நான் சட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றால், நான் அதைச் செய்வேன். நான் தற்போது சட்டக் குழுவின் உதவியை நாடுகிறேன். சுற்றிக் கிடக்கும் பணத்தை என்ன செய்வது என்பது குறித்து எனக்கு ஆலோசனை வழங்குமாறு நீதித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்த பணம் எங்கே என்று கேட்டபோது பிரதமர் மோடி கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய 'நியாய சன்ஹிதா'வில் இது தொடர்பாகச் "சில ஏற்பாடுகள் உள்ளன" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசு அமைப்புகள் இதுவரை ரூ.1.25 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்துள்ளன.