பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் முன் சமர்பிக்கப்பட்டது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பெண்கள் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் முன் சமர்பிக்கப்பட்டது.
“வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளோம். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும்” என்று அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் கூறினார். இந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு அந்த அறிக்கையை யாரிடமும் பகிரக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். இந்த அறிக்கையை முத்திரையிடப்பட்ட கவரில் தில்லி காவல் துறை தாக்கல் செய்துள்ளது. சமர்பிக்கப்பட்ட பின்னர், வழக்கின் அடுத்த விசாரணையை மே 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.