Breaking News
செர்பிய தலைநகர் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி, 10 பேர் காயம்
மிலாடெனோவாக்கிற்கு அருகில் உள்ள மக்கள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

தலைநகர் பெல்கிரேடுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் வியாழக்கிழமை (உள்ளூர் நேரம்) பிற்பகுதியில் 21 வயது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். கடந்த இரண்டு நாட்களில் செர்பியாவில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூடு இது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக இளைஞர் தானியங்கி ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளார். பெல்கிரேடில் இருந்து தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிலாடெனோவாக்கிற்கு அருகில் உள்ள மக்கள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
தாக்குதல் நடத்திய வாலிபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு அவர் தப்பி ஓடிவிட்டார். இதுவரை காவல்துறை தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.