Breaking News
வன்கூவர் நகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வன்கூவர் நகரில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமர் வீதி மற்றும் வெஸ்ட் பெண்டர் வீதிக்கு அருகில் இரவு 7.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வன்கூவர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
புலனாய்வாளர்கள் பல மணி நேரம் சம்பவ இடத்திலேயே இருந்தனர்.
சந்திப்பு மற்றும் முக்கிய பாதைப் போக்குவரத்து பாதசாரிகளுக்கு மூடப்பட்டது.