Breaking News
ஐபிஎல்லில் இனியாவது கர்ஜிக்குமா RCB அணி? தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் நியமனம்

2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
மிகவும் பலம் வாய்ந்த அணியாகவும், ரசிகர்கள் ஆதரவு அதிகம் கொண்ட அணியாகவும் ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.
இப்படியிருக்கும் போதிலும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்ல முடியாமல் அந்த அணி திணறி வருகிறது.
இந்த சூழலில் ஆர்.சி.பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், ஜிம்பாப்வே அணியின் ஜாம்பவானுமான ஆண்டி ப்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனியாவது ஆர்.சி.பி அணி வெகுண்டெழுந்து ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.