Breaking News
லீட்ஸ் கவுண்டியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் கவுண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளின் 21 வயதான ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டனுக்கு வடகிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோர்டனுக்கு அருகிலுள்ள ரிட்ஸ் சாலை மற்றும் கவுண்டி சாலை 11 சந்திப்பில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்திப்பை மூடுவதாக காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர்.