அறுகம் குடாவுக்கான முக்கிய சுற்றுலாத் திட்டத்தை சாகலா முன்வைக்கிறார்
அறுகம் குடா சுற்றுலா அபிவிருத்தித் திட்டம், சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறுகம் குடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால், அறுகம் குடாவிற்கான பிரதான சுற்றுலா திட்டம் முன்வைக்கப்பட்டது.
அறுகம் குடா சுற்றுலா அபிவிருத்தித் திட்டம், சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான சந்திப்பில் இனங்காணப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறுகம் குடாவுக்கான பிரதான சுற்றுலாத் திட்டத்தை திரு. சாகல ரத்நாயக்க சமர்ப்பித்தார்.