Breaking News
பிணைமுறி மோசடி வழக்கில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடமிருந்து விலக்களிப்பைக் கோரவில்லை: பேச்சாளர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விலக்களிப்பு கோருவதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை என்றும், உண்மையில் அவர் அத்தகைய கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கவில்லை

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து விலக்களிப்பை ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் கோரவில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் முன்வைத்த கூற்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விலக்களிப்பு கோருவதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை என்றும், உண்மையில் அவர் அத்தகைய கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வழக்கில் ஒரு சாட்சியாக கூட இல்லை என்றும் அவர் கூறினார்.