2ம் காலாண்டில் கனடாவின் அலுவலகக் காலியிட விகிதம் 1994 முதல் மிகவும் உயர்வு: அறிக்கை
கல்கரி மற்றும் வாட்டர்லூ பகுதியைத் தவிர அனைத்து முக்கிய மையங்களிலும் இரண்டாம் காலாண்டில் நகரக் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.

வணிக ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கோல்ட்வெல் பேங்கர் ரிச்சர்ட் எல்லிசின் அறிக்கையின்படி, கனடாவில் தேசிய அலுவலகக் காலியிடங்களின் விகிதம் இரண்டாவது காலாண்டில் 1994 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளது.
முதல் காலாண்டில் 17.7 சதவீதமாக இருந்த தேசிய அலுவலகக் காலியிட விகிதம் இரண்டாவது காலாண்டில் 18.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இது 1994 முதல் காலாண்டில் 18.6 சதவீதமாக இருந்ததில் இருந்து அதிகபட்ச அளவாகும்.
முதல் காலாண்டில் 18.4 சதவீதமாக இருந்த நகர அலுவலகக் காலியிட விகிதம் இரண்டாம் காலாண்டில் 18.9 சதவீதமாக உயர்ந்ததால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. புறநகர் அலுவலகக் காலியிட விகிதம் 16.8 சதவீதத்தில் இருந்து 17.1 சதவீதமாக இருந்தது.
கல்கரி மற்றும் வாட்டர்லூ பகுதியைத் தவிர அனைத்து முக்கிய மையங்களிலும் இரண்டாம் காலாண்டில் நகரக் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
'கோல்ட்வெல் பேங்கர் ரிச்சர்ட் எல்லிஸ்' நிறுவனம், கனேடிய அலுவலகக்ச் சந்தைகள் மந்தநிலை, வட்டி விகித உயர்வு, தொழில்நுட்பத் துறை பலவீனம், குத்தகைதாரர்கள் தங்களுடைய இடங்களின் அளவைக் குறைத்தல் மற்றும் புதிய அலுவலகக் இடங்களை வழங்குதல் போன்ற அச்சுறுத்தல்களால் சிக்கி தவிப்பதாகக் கூறுகிறது.