மோசடி வழக்கில் $3.2 மில்லியன் திருப்பிச் செலுத்த முன்னாள் மில்புரூக் ஊழியருக்கு நீதிபதி உத்தரவு
தனக்குத் தகுதியில்லாத பணத்தைப் பெற்றுக்கொண்டு மில்புரூக்கிற்கான தனது நம்பிக்கைக்குரிய கடமையை மீறினார் என்பதில் உறுதி அடைவதாக அதில் நீதிபதி குறிப்பிட்டார்.

மில்புரூக் முதல் தேசத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பூர்வீகக் குழுவிற்கு $3.2 மில்லியனுக்கும் அதிகமாகவும், கூடுதலாக, $849,000-க்கும் அதிகமான வட்டியையும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.
டான் எல்லிஸ்-அபோட் மில்ப்ரூக்கின் மூத்த நிதி எழுத்தராக பணிபுரிந்தார். மேலும் அந்தப் பொறுப்பில் அவர் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் அவருக்கு அதிக சுயாட்சி இருந்தது. காசோலைகளை எழுதுவதிலும், தனிப்பட்ட செலவுகள் மற்றும் சமூகத்துடன் தொடர்பில்லாத பிற செலவுகளுக்கு முதல் தேசத்தின் விசாவைப் பயன்படுத்துவதிலும் அந்த சுயாட்சியை துஷ்பிரயோகம் செய்ததாக மில்ப்ரூக் குற்றம் சாட்டியது.
இந்த ஆண்டு ஏப்ரலில் எல்லிஸ்-அபோட் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த நேரத்தில், ஆர்சிஎம்பி அவர் $4 மில்லியன் எடுத்ததாக மதிப்பிட்டது. குற்றவியல் மோசடி வழக்கு இன்னும் நீதிமன்றங்களில் உள்ளது, கிறிஸ்துமசுக்குச் சற்று முன்பு மற்றொரு விசாரணை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக குற்றவியல் வழக்கைத் தவிர, அவர் மீதும், அவரது சில கூட்டாளிகள் மீதும் மற்றும் அவரது வணிகச் சொத்துக்கள் மீதும் மில்புரூக் உரிமையியல் நடவடிக்கையைத் தொடங்கியது.
வியாழன் வெளியிடப்பட்ட தீர்ப்பில், நோவா ஸ்கோடியா உச்ச நீதிமன்ற நீதிபதி பியர் மியூஸ் சிவில் வழக்கில் எல்லிஸ்-அபோட்டுக்கு எதிராக ஒரு சுருக்கமான தீர்ப்பை வழங்கினார். எல்லிஸ்-அபோட் தனக்குத் தகுதியில்லாத பணத்தைப் பெற்றுக்கொண்டு மில்புரூக்கிற்கான தனது நம்பிக்கைக்குரிய கடமையை மீறினார் என்பதில் உறுதி அடைவதாக அதில் நீதிபதி குறிப்பிட்டார்.
வியாழக் கிழமை வெளியான தீர்ப்பில் மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட ஒரு பகுதி தீர்ப்பின் தொடர்ச்சியாகும். இதில் $3.2 மில்லியன் தொகையும் அடங்கும். ஆனால் அந்தத் தீர்ப்பில் வட்டி குறித்து எதுவும் இல்லை. எல்லிஸ்-அபோட் தனது செலவினத்திற்கு வழங்கிய விளக்கங்களை நீதிபதி நிராகரித்தார்.