2023 ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறிலங்காவுக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம்
சிறிலங்கா அணி 3:25.41 நிமிடங்களில் முதலிடத்தையும், தென் கொரியாவும் (3:28.30) இந்தியாவும் (3:30.13) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
தென் கொரியாவின் யெச்சியோனில் தற்போது நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட 20 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400 மீற்றர் கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் சிறிலங்கா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
சிறிலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி தருஷி கருணாரத்ன, ஜெய்ஷி உத்தரா, வினோத் ஆரியவன்ஷ மற்றும் ஷெஹான் தில்ரங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
சிறிலங்கா அணி 3:25.41 நிமிடங்களில் முதலிடத்தையும், தென் கொரியாவும் (3:28.30) இந்தியாவும் (3:30.13) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறிலங்கா வீராங்கனை தருஷி கருணாரத்னா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது 20 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப்பில் சிறிலங்காவின் இரண்டாவது தங்கப் பதக்கம் மற்றும் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையை ஐந்தாக (2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) கொண்டு வந்துள்ளது.