எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
2025 பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் அநுராதபுரம் காவல்துறைக்கு, (நீதிமன்றத்திடம்) உண்மைகளை அறிவிக்குமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும், அவர் பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விதிமீறல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், 2025 பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் அநுராதபுரம் காவல்துறைக்கு, (நீதிமன்றத்திடம்) உண்மைகளை அறிவிக்குமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இன்று (20) மாலை விசாரணைகளைக் காவல்துறை முன்னெடுத்ததுடன், சம்பவம் தொடர்பான உண்மைகள் அநுராதபுரம் காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.