Breaking News
மலாவி துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்
51 வயதான சிலிமா, உள்ளூர் நேரப்படி காலை 9.17 தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட மலாவி பாதுகாப்புப் படை விமானத்தில் இருந்தார்,

மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் கிளாஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேருடன் சென்ற விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"விமானம் ரேடாரில் இருந்து விலகியதிலிருந்து அதனுடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன" என்று மலாவியின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
51 வயதான சிலிமா, உள்ளூர் நேரப்படி காலை 9.17 தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட மலாவி பாதுகாப்புப் படை விமானத்தில் இருந்தார், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.