Breaking News
மலையாள நடிகர் ஹரிஷ் பெங்கன் காலமானார்.
கடுமையான கல்லீரல் நோயால் சிகிச்சை பெற்று வந்தார்.
மலையாள நடிகர் ஹரிஷ் பெங்கன், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே 30ஆம் தேதி காலமானார். இந்த மாத தொடக்கத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையான கல்லீரல் நோயால் சிகிச்சை பெற்று வந்தார்.
மகேஷிண்டே பிரதிகாரம், மின்னல் முரளி போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகர் ஹரிஷ் பெங்கன் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். 49 வயதான அவர் கடுமையான கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார்.