பலர் தங்கள் செல்லப்பிராணிகளை ஒப்படைத்து வருகின்றனர்
இது நிதி ரீதியாக சிரமப்படும் உரிமையாளர்களுக்கு செல்லப்பிராணி உணவை வழங்குகிறது.
பெரும்பாகம் ரொறன்ரோ பகுதி விலங்குகள் தங்குமிடம் ஆதரவிற்காக சமூகத்தை நோக்கி உதவி கேட்கத் திரும்புகிறது. மேலும் அதிகமான செல்லப்பிராணிகள் ஒப்படைக்கப்படுவதால் ஆர்வலர்களிடம் கூடுதல் நிதி உதவி கோருகிறது.
ஓக்வில் மில்டன் ஹ்யூமன் சொசைட்டி (Oakville Milton Humane Society) 38 நாய்கள் உட்பட 131 விலங்குகளைப் பராமரிக்க நிதி உதவி வழங்குமாறு நன்கொடையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்குமிடம் அதன் உணவு வங்கிக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. இது நிதி ரீதியாக சிரமப்படும் உரிமையாளர்களுக்கு செல்லப்பிராணி உணவை வழங்குகிறது.
தங்குமிடத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவின் தலைவர் லிசா பென்னட், அவர்களின் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்து வருவதால் நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ளது என்று கூறுகிறார். ஒரு நன்கொடையாளர் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு டாலரையும் ஜூலை 31க்குள் $5,000 வரை பொருத்துவதாக உறுதியளித்துள்ளார்.