Breaking News
காணாமல் போன 8 வயது சிறுவன் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அவர் பிரின்ஸ் ஆல்பர்ட், சஸ்காட்டூன் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

தண்டர் பேயில் கடைசியாக காணப்பட்ட எட்டு வயது சிறுவனுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர் பிரின்ஸ் ஆல்பர்ட், சஸ்காட்டூன் நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
குழந்தை, எமர்சன் பவுலின் மற்றும் கிறிஸ்டோபர் டேனியல் பவுலின் ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்குத் தண்டர் பே காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் கடைசியாக கிழக்கு நேரப்படி திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் வடமேற்கு ஒன்றாரியோ நகரத்தில் காணப்பட்டனர். மேலும் அவர்கள் மேற்கு நோக்கி பிரின்ஸ் ஆல்பர்ட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கலாம்.
சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.