Breaking News
உலகின் முதலாவது பன்னாட்டு சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் சிறிலங்காவில் நிறுவப்படவுள்ளது
ஜனாதிபதி, இந்த முயற்சியில் சிறிலங்காவுடன் இணைந்து கொள்ளுமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது பன்னாட்டு சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் சிறிலங்காவில் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற 2020-2021 10 ஆவது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதியின் பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தாலும், அதை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சியில் சிறிலங்காவுடன் இணைந்து கொள்ளுமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.