Breaking News
அப்பாவை போலவே தெலுங்கு பக்கம் சென்றார் அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவை தாண்டி இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் தற்போது ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், விவாகரத்து செய்து இரண்டாவது திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார். இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டருக்கு படித்த நிலையில், சினிமாவில் நடிகையாகத் தான் போகிறேன் என கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
தமிழ் சினிமாவை தாண்டி இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் தற்போது ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், அப்பாவை போலவே தெலுங்கு பக்கம் ஒதுங்கியிருக்கிறார் நடிகை அதிதி ஷங்கர்.
அங்கே அவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள பைரவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு டோலிவுட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.