Breaking News
புதிய சுகாதார செயலாளராக வைத்தியர் பாலித மஹிபால நியமனம்
புதிய சுகாதார செயலாளராக வைத்தியர் மஹிபால எதிர்வரும் திங்கட்கிழமை (20) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவின் சேவைக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சுகாதார செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சுகாதார செயலாளராக வைத்தியர் மஹிபால எதிர்வரும் திங்கட்கிழமை (20) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர் மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார். ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.