இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
நம் அண்டை நாடான இலங்கையை புரட்டிப் போட்ட ' தித்வா ' புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் காணாமல்போயுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தித்வா புயலால் பாதித்த இலங்கைக்கு உதவ தமிழகம் தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையை புரட்டிப் போட்ட ' தித்வா ' புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் காணாமல்போயுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதையடுத்து அங்கு, அவசரநிலையை, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் இலங்கையை சென்றடைந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். கடற்படை வீரர்களும் ஹெலிெகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இலங்கை வெள்ளப் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என மத்திய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம். மேலும் 'மத்திய அரசுடன் இணைந்து செயற்பட அதிகாரிகள் குழுவை அமைக்க தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





