மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக இணைந்து செயற்பட ஆறுகட்சிகள் இணக்கம்
பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரான ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளத்தை வரவேற்கிறேன்.
அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் சகல இனத்தவர்களும் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பாராளுமன்றத்தை பிரநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் கொள்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.
புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதுடன்இதற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு பொறிமுறை ஒன்றை வகுப்பதற்கும் தீரமானித்துள்ளனர்.
கொழும்பு ரேணுகா ஹோட்டலில் 13-07-2026அன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்இ தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்இ கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்இ இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள்., பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டுஇ சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் என தெரிவித்தனர்.
இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசியலமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்திற்குள் நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர். மேலும் ஜனநாயக பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் காணி பிரச்சினைகள் நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்துஇ நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்ததுடன்இ இந்த விடயங்களில் பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் இந்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டை தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் இணைப்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் செயற்படுகிறார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வருமாறு கருத்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரிசாட் பதியுதீன், இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கத்தக்கது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அனைவரும் பேசுகிறோம். தற்போதைய இந்த முயற்சி முன்னேற்றகரமானதாக அமையும் என்று நம்புகிறோம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு தளமாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரான ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளத்தை வரவேற்கிறேன். தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த காலங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எம்மில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்றார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் காணி அபகரிப்பு என்பது இன்றளவிலும் தொடர்கிறது.இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.இந்த கூட்டிணைவு தொடர வேண்டும் என்றார்.
தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு குரலாகவே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதியுச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் சகல இனத்தவர்களும் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைக்கு தீர்வு ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டில் பேரினவாதம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. ஆகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அதற்கான ஆரம்பமே இது என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்த புதிய ஒன்றிணைவு இனவாதமல்ல, அரசியல் நோக்கமுடையதுமல்ல, அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள இறைமை மற்றும் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம்.பொது கோட்பாட்டுக்கு அமைவாக இதுவரையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண்போம் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இது இனவாத கூட்டணியல்ல, இனவாதத்துக்கு எதிரான அணி. எமது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய அணியை நாங்கள் தற்போது உருவாக்கியுள்ளோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி விரைவாக நிறைவேற்ற வேண்டும்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் 'விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம் மனோ' என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட 'ஹட்டன் பிரகடனம்' உள்ளடக்க அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.





