பாகிஸ்தானில் இருந்து கப்பல் மூலம் மேலும் 200 தொன் நிவாரணப்பொருட்கள்
நிவாரணப் பொருட்களில் தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள், காற்று நிரப்பக்கூடிய படகுகள், நீர் அகற்றும் இயந்திரங்கள், முகாம் விளக்குகள், கொசு வலைகள், பால்மா, உடனடியாக பயன்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என்பன அடங்குகின்றன.
பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு அறிவுறித்தலின் கீழும், பாகிஸ்தான் வழங்கிவரும் தொடர் மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஓரங்கமாகவும் பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பிவைக்கப்பட்ட 200 மெட்ரிக் தொன் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் 15-12-2025 அன்று இலங்கையை வந்தடைந்தன.
"தித்வா" சூறாவளியை அடுத்து உருவான பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகள் பலவும் உதவிகளை வழங்கவரும் நிலையில், பாகிஸ்தானும் பல்வேறு வழிகளில் தொடர் உதவிகளை வழங்கி வருகிறது.
அதற்கமைய பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிவாரணப் பொருட்களில் தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள், காற்று நிரப்பக்கூடிய படகுகள், நீர் அகற்றும் இயந்திரங்கள், முகாம் விளக்குகள், கொசு வலைகள், பால்மா, உடனடியாக பயன்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என்பன அடங்குகின்றன.
இந்த நிவாரணப்பொருட்கள் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அசீஸினால் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்தானிகரகம் தெரிவித்துள்ளது.





