"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி
இவ் நடைபவனியில் பலர் கலந்துக் கொண்டனர்.
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி இன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், கெளரவ ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகியது.
இந் நடைபவனியில் - மாவட்டச் செயலகத்திலிருந்து மாவட்டச செயலக உத்தியோகத்தர்கள், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், அதேவேளை கெளரவ ஆளுநர் செயகத்திலிருந்து ஆளுநர் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.
இவ் நடைபவனியில் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ் கபிலன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும், இந் நடைபவனி மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி - வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து, அங்கிருந்து முதலாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதியைச் சென்றடைந்து, பஸ்ரியான் சந்தி மற்றும் கண்டி வீதி ஊடாக மீண்டும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை காலை 10.00 மணியளவில் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.





