முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் களஞ்சியகள் நிர்மாணம்
பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை சமர்;ப்பிப்பதற்கு 2026.07.20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் களஞ்சிய தாங்கிகள் மூன்றினை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 11-08-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியத்தைப் பயன்படுத்தி முத்துராஜவெல முனையத்தில் 15,000 கனமீற்றர் எரிபொருள் களஞ்சிய தாங்கிகள் 02 உம் மற்றும் 10,000 கனமீற்றர் எரிபொருள் களஞ்சிய தாங்கி ஒன்றையும் நிர்மாணிப்பதற்கு 2025.06.02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது சுற்றாடல், சட்ட ரீதியான மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பாக அந்தந்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை சமர்;ப்பிப்பதற்கு 2026.07.20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் விதிக்கப்பட்டுள்ள விதப்புரைகள் மற்றும் நிபந்தனைகள் இப்பெறுகையின் ஒப்பந்த உடன்படிக்கையில் உட்சேர்;க்கப்பட்டுள்ளமையால், மற்றும் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி முறைக்கமைய விலை மனுக்களை சமர்ப்பித்துள்ள விலைமனுதாரர்களில் உயர்மட்ட பெறுகைக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலை மனுதாரரான M/s Indo – East Engineering & Construction (Lanka) (Private) Limited and Ceylex Engineering (Private) Limited Joint Venture இற்கு 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (பெறுமதி சேர் வரி இல்லாமல்) மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய்கள் (பெறுமதி சேர் வரி இல்லாமல்) தொகைக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது என்றார்.





