Breaking News
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அங்கீகாரம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு), விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக எல்.மொஹமட் நவவி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது.