இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது: நாமல்
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பௌத்த தேரர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பௌத்த தேரர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவமதிக்கப்பட்டுள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி நாங்கள் செயற்படுவோம். தேசியத்துக்காக குரல் கொடுப்பவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாபலகம பகுதியில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: எதிர்கால தலைமுறையினர் மற்றும் நாட்டின் தேசியம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி நாங்கள் செயற்படுகிறோம். இனவாதம், வெறுப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எமக்கு கிடையாது.
கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும், சேறு பூசுவதற்கும் முகவர்களுக்கு நிதியளித்தவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள். அவர்கள் இன்று பொலிஸ் மற்றும் நீதித்துறையை தமக்கு ஏற்றாட்போல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
என்னை குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், எனது தாயை நிதிக்குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து நெருக்கடிக்குள்ளாக்கி அரசாங்கத்தின் ஊழல் மோசடியையும், முறையற்ற அரச நிர்வாகத்தையும் மூடி மறைக்க முடியாது. எம்மை சிறைக்கு அனுப்பினாலும் அரசாங்கத்தின் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவோம்.
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. பௌத்த தேரர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவமதிக்கப்பட்டுள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி நாங்கள் செயற்படுவோம். தேசியத்துக்காக குரல் கொடுப்பவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம்.
தேசியத்தை முன்னிலைப்படுத்தியே நாங்கள் செயற்படுவோம்.கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளால் எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். சகல தரப்பினரும் ஒன்றிணைந்து சிறந்த அரசாங்கத்தை எதிர்காலத்தில் தோற்றுவிக்கலாம் என்றார்.





