4 இலங்கையர்கள் மீது பிரித்தானியா விதித்துள்ள தடைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை குழு நியமனம்
பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட 4 இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையர்கள் 4 பேர் மீது அண்மையில் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனவே குறித்த விடயங்களை ஆராய்ந்து பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கும், குறித்த துறையில் துறைசார் நிபுணத்துவம் கொண்டதாகக் கருதப்படும் எந்தவொரு உத்தியோகத்தர் / புத்திசாலியின் சேவையையும் பெற்றுக் கொள்வதற்கு குழுவுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.





