ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் உரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் 23-05-2026 அன்று தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாட சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் 23-05-2026 அன்று தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை இரவு விசேட கூட்டமொன்று நடைபெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்கு உடனடியாக சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்ட வேண்டும் என்றும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நேரில் அறிவிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
அந்த இணக்கப்பாட்டின் படி, கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இதன்போது பதிலளித்துள்ள ஜனாதிபதி, தான் தற்போது மட்டக்களப்பில் தங்கியிருப்பதாகவும், கொழும்பு திரும்பியதும் இது தொடர்பில் இறுதிப் பதிலைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறியப்படுத்தியுள்ளார்.





