Breaking News
டெல்லி ஏரோசிட்டியில் ஆகஸ்ட் 11-ம் தேதி விற்பனையகத்தைத் திறக்கிறது டெஸ்லா
இந்த விற்பனையகம் ஏரோசிட்டியில் உள்ள வேர்ல்ட்மார்க் 3 இல் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்படும்.

மும்பையைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் டெஸ்லா ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியாவில் தனது இரண்டாவது விற்பனையகத்தைத் திறக்க உள்ளது.
இந்த விற்பனையகம் ஏரோசிட்டியில் உள்ள வேர்ல்ட்மார்க் 3 இல் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்படும்.
முன்னதாக, ஜூலை மாதத்தில், டெஸ்லா தனது முதல் விற்பனையகத்தை மும்பையின் பாந்த்ரா-குல்லா வளாகத்தில் திறந்தது.