Breaking News
செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 04-08-2025 அன்று மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 30வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு இடம்பெற்ற அகழ்வு பணிகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.