இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மெயர்
கலிபோர்னியாவை சேர்ந்த இராஜதந்திரியான எரிக் மெயர், தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் முடிவுக்குவரவுள்ள நிலையில், அடுத்த அமெரிக்கத்தூதுவராக எரிக் மெயரின் பெயரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி ட்ரம்பின் முன்மொழிவு அமெரிக்க செனெட்டின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த இராஜதந்திரியான எரிக் மெயர், தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். அதன்படி அவர் பணியகத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவி, நேபாளம், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளடங்கலாக தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்திய நாடுகளுடன் அமெரிக்காவின் கொள்கைகள் தொடர்பில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டுவருகிறார்.
அதுமாத்திரமன்றி எரிக் மெயர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் விசேட உதவி அதிகாரியாகவும், சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.