Breaking News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 17 முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக உறுதி
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 17 முன்னாள் குருநாகல் பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பின் போது ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தமது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.