இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தூதரகம் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்டுவரும் பதில் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவி்க்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர் எவருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து எங்களிடம் விசாரித்து வருகின்றனர்.இலங்கையர்களுக்கு எந்த பிரச்சினையும் தற்போதைக்கு இல்லை. எதாவது மோசமான நிலைமை ஏற்படுமாக இருந்தால், அது தொடர்பில் நாங்கள் அறிவிப்போம். அதனால் இலங்கையில் இருக்கும் உறவினர்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இஸ்ரேலில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் 99 வீதம் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இஸ்ரேலில் தற்போது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தி இருக்கிறன்போதும் எமது தூதரகம் திறந்தே இருக்கிறது. அதனால் இலங்கையர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்றார்.





