வாகனப் பதிவில் மோசடி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது
வாகனப் பதிவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனப் பதிவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 28-03-2026 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு கெப் ரக வாகனத்தின் செஸி இலக்கத்தை மாற்றி, அதனை மோசடியான முறையில் பதிவு செய்வதற்கு உதவியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கமல் அமரசிங்க, நேற்று சனிக்கிழமை குருணாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.