ஜனாதிபதி தலைமையில் தேசியப் போர் வீரர்கள் தின கொண்டாட்டம் இன்று நடக்கிறது
இராணுவத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி தலைமையில் இந்த வைபவம் இடம்பெறவுள்ளதாக அதிகாரச் சபையின் தலைவர் பிரிகேடியர் செனரத் கோஹன தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யுத்த வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (19) இடம்பெறவுள்ள தேசியப் போர் வீரர்கள் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக ரணவிரு சேவா அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி தலைமையில் இந்த வைபவம் இடம்பெறவுள்ளதாக அதிகாரச் சபையின் தலைவர் பிரிகேடியர் செனரத் கோஹன தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வெற்றி தினம் என்றும் அழைக்கப்படும் தேசியப் போர் வீரர்கள் தினம் இன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள தேசியப் போர்வீரர் நினைவுத்தடத்தில் நடைபெற உள்ளது.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ப்லீட் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கௌரவ அதிதிகளும்; மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளுக்கு தலைமை தாங்கிய விமானப்படை மார்ஷல் ரொஷான் கூனெட்டிலேக் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





